Current Affairs in Tamil – September-16, 2021

Current Affairs in Tamil – September-16, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 16, 2021

தமிழ்நாடுச் செய்திகள்

தமிழக உள்ளாட்சித் தேர்தல்

  • மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான தேதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வி.பழனிகுமார் அறிவித்தார்.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்.
  • அக்- 06 மற்றும் அக்- 09 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு ஆக்டோபர் 12 ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
  • மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிற்கான தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் அக்டோபர் 22 அன்று நடைபெறும்.

தேசியச் செய்திகள்

டிஜிட்டல் மக்கள் தொகை கடிகாரம்

  • மக்கள்தொகை மனித முதலீடு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கிற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக். பாரதி பிரவீன் பவார் தலைமைதாங்கினார்.
  • தில்லி பல்கலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தில், டிஜிட்டல் மக்கள் தொகை கடிகாரத்தை அவர் திறந்து வைத்தார்.

தோஷன் ஆங் சங்க்

  • தென்கொரிய நாடானது தனது சொந்த நீர்மூழ்கி ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி உந்துவிசை ஏவுகணையாகும்.
  • இதன் மூலம் இத்தகைய ஏவுகணையை கொண்ட 8வது நாடாக தென்கொரியா மாறியுள்ளது.
  • இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்சு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வரிசையில் தென்கொரியா இணைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர்

  • மூத்த பா.ஜ.க. தலைவர் பூபேந்திரா படேல் அவர்கள் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
  • விஜய் ரூபானி இந்த ஆண்டின் ராஜினாமா செய்த 4வது பா.ஜ.க முதலமைச்சராவார்.
  • இவர் கர்நாடக முதல்வர் B.S எடியூரப்பா, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் ஆகியயோரைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Star.