Current Affairs in Tamil – September-14, 2021

Current Affairs in Tamil – September-14, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 14, 2021

தேசிய செய்திகள்

மத்திய நேரடி வரிகள்

  • மூத்த அதிகாரியான J.B மோகபத்ரா மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1985 தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான மோகபத்ரா, தற்போது வருமான வரித்துறையின் கொள்கையை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
  • அமைச்சரவை நியமனக்குழுவானது CBDT இல் தலைவராக மோகபத்ரா அவர்களை நியமிக்க ஒப்புதலளித்துள்ளது.

சுவச் சர்வேக்சன் கிராமீன் 2021

  • இது சுவச் பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் “அசாதி கா அம்ரித் மகோத்சவ்” என்ற கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தொடங்கப்பட உள்ளது.
  • இதன் நோக்கம் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற உபரி இடங்களின் இடையீடுகள் மற்றும் பயன்களைப் பெறுவதை முடுக்கி விடுவதில் உதவுகிறது.

உள்ளுர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு

  • ஜார்க்கண்ட் மாநில அரசானது ரூ.40000 வரை மாத சம்பளமாக வழங்கக் கூடிய தனியார் துறை வேலைகளில் உள்ளுர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.
  • இது அறிவிக்கப்பட்டால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களையடுத்து இத்தகைய சட்டத்தை இயற்றிய 3வது இந்திய மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் உருவெடுக்கும்.

ஆத்ம நிர்பர் பாரத் முனையங்கள்

  • இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனமானது வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள 75 இந்தியத் தூதரகங்களில் ஆத்ம நிர்பர் பாரத் முனையங்களை அமைத்து வருகிறது.
  • முதலாவது ஆத்ம நிர்பர் பாரத் முனையமானது தாய்லாந்தில் உள்ள பாங்காக் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்திய் தூதரகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

வதன் பிரேம் யோஜனா

  • இது குஜராத் அரசின் மாதர் –இ-வதன் என்ற திட்டத்தின் ஒரு மறுதொகுப்புத் திட்டம் ஆகும்.
  • மாதர்-இ-வதன் திட்டத்தின் பெயரானது பாரசீக மொழியோடுத் தொடர்புடைய ஒரு காரணத்தால் அதன் பெயர் மாற்றப்பட்டது.
  • இது மேம்பாட்டுப் பணிகளில் பொது மக்களின் பங்கேற்பினை ஊக்குவிப்பதற்கான ஒரு மிகப்பெரிய பிரச்சாரமாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the house.