Current Affairs in Tamil – September-1, 2021

Current Affairs in Tamil – September-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 1, 2021

தேசியச் செய்திகள்

உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் – இந்தியா

  • கோட் டி ஐவோரியின் அபிட்ஜானில் நடைபெற்ற 27வது UPU மாநாட்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் இரு முக்கிய அமைப்புகளின் உறுப்பினர் பொறுப்பிற்காக நடத்தப்பட்ட தேர்தலில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாகச் சபைக்கா தேர்தலில் தெற்காசியா மற்றும் ஒசியானியா பகுதிகளில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்றது.

POSHAN (PM’s Overarching Scheme for Holistic Nourishment)

  • போஷான் அபியான் திட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதமானது போஷான் மாஹ் (POSHAN Maah) நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது.
  • சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் பங்கேற்பினை அதிகரித்தல் போன்றவற்றிற்காக இந்நிகழ்வானது அனுசரிக்கப்படுகிறது.
  • நீரஜ் சோப்ரா மைதானம்

    • புனேவிலுள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்கு வருகை புரிந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த நிறுவனத்தின் மைதானத்திற்கு “நீரஜ் சோப்ரா மைதானம்“ எனப் பெயரிட்டார்.
    • ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு கௌரவமளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 07 ம் தேதியன்று ஈட்டி எறிதல் தினமாக அனுசரிக்கப்படும் என இந்தய தடகளக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

      அதிவேகமாகச் சுற்றி வரும் குறுங்கோள்

      • அமெரிக்காவின் கார்னெகி அறிவியல் கல்வி நிறுவனத்தின் வானியலாளர்கள் சூரியக் குடும்பத்தில் அதிவேகமாக சுற்றி வரும் ஒரு குறுங்கோளினைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்தனர்.
      • 2021 PH27 எனும் அதிவேகமாக சுற்றி வரும் குறுங்கோளானது இருள் ஆற்றல் (டார்க் எனர்ஜி) புகைப்படக் கருவியைக் கொண்டு கண்டறியப்பட்டது.
      • 113 பூமி நாட்களில் தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.

      விளையாட்டுச் செய்திகள்

      நொய்சியல் சர்வதேச ஓபன் 2021 சதுரங்கப் போட்டி

      • இந்தியக் கிராண்ட் மாஸ்டர் P இனியன் நொய்சியஸ் சர்வதேச ஓபன் 2021 சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

      டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020

      • ஆடவருக்கான F46 போட்டியில் வட்டு எறியும் வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கப்பதக்கம் வென்றனர்
      • துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லேக்கரா பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the key.