Current Affairs in Tamil – October-2, 2021

Current Affairs in Tamil – October-2, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 2, 2021

தேசியச் செய்திகள்

நிதி 2.0 திட்டம்

  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி 2.0 (NIDHI 2.0 – National Integrated Database of Hospitality Industry – விருந்தோம்பல் தொழில் துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத் தளம்) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டமானது 2021 ஆம் ஆண்டு உலகச் சுற்றுலாத் தினத்தன்று (செப்டம்பர் 27) தொடங்கப்பட்டது.
    • முக்கியத் துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் 60 சதவிகிதப் பங்கு

      • 2030 ஆம் ஆண்டுக்குள் 50% துறைமுக உபகரணங்களை மின்மயமாக்குவதையும் அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.
      • 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வினை 30% வரை குறைப்பதறகும் துறைமுகங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

      சர்வதேசச் செய்திகள்

      லேண்ட்சாட் – 9

  • இது சமீபத்தில் நாசாவினால் விண்ணில் ஏவப்பட்டது.
  • இது ஒரு புவி கண்காணிப்புச் செயற்கைக் கோளாகும்.
  • இது நாசா மற்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் கூட்டுத் திட்டம்.
  • லேண்ட்சாட் – 8 செயற்கைக் கோளுடன் இணைந்து இந்த செயற்கைக்கோள் புவிப் பரப்பின் மீதான புகைப்படங்களைச் சேகரிக்கும்.
  • புவி முழுவதிலும் படமெடுக்க இதற்கு 8 நாட்கள் ஆகும்.

பொருளாதாரச் செய்திகள்

PM POSHAN திட்டம் தொடர்ச்சி

  • பள்ளிகளில் PM POSHAN திட்டத்தினைத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டமானது மத்திய அரசினால் நிதி வழங்கப்படும் ஒரு திட்டம்.
  • 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

    கருவிழி மாற்று சிகிச்சைக்கு மாற்றுமுறை

    • ஹைதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது உபயோகமற்ற கரு விழிகளிலிருந்து ஒரு ஹைட்ராஜெல்லினை உருவாக்கியுள்ளது.
    • கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம்.
      Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

      Get a Call from our Expert Counsellor

        Please prove you are human by selecting the House.