Current Affairs in Tamil – October-1, 2021

Current Affairs in Tamil – October-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 1, 2021

தமிழ்நாடு செய்திகள்

டபோயிங் ஒப்பந்தம் – தமிழ்நோடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனம்

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனமானது “முதன் முறையாக “போயிங்“ எனப்படும் மிகப்பெரிய விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
  • சேலத்தில் அமைந்துள்ள விண்வெளிப் பொறியாளர் தனியார் நிறுவனமானது போயிங் நிறுவனத்திடமிருந்து இந்த நீண்டகால ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
    • தேசியச் செய்திகள்

      இந்தியப் பத்திரிக்கைக் கழகம் – தேர்தல்

      • ஆனந்த பசார் பத்திரிக்கைக் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் துணைத் தலைவருமான
        அவீக் சர்கார் இந்தியப் பத்திரிக்கைக் கழகத்தின் தலைவராக மீண்டும்
        தேர்ந்தெடுக்கப்பட்டார்.
      • இது நாட்டின் மிகப்பெரிய முன்னணிப் பத்திரிக்கை நிறுவனமாகும்.
      • K.N. சாந்த் குமார் அதன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

      காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்

      • காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
      • இந்த ஆணையம் நிறுவப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நேரத் தலைவரை அரசு நியமித்துள்ளது.

      சர்வதேசச் செய்திகள்

      UNESCO உலகப் புத்தகத் தலைநகரம் 2023

      • UNESCO அமைப்பின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே, அக்ரா (கானா)
        என்னுமிடத்தை 2023 ஆம் ஆண்டிற்கான UNESCO உலகப் புத்தகத் தலைநகராக
        அறிவித்துள்ளார்.
      • யுனெஸ்கோவின் உலகப் புத்தகத் தலைநகரங்கானது அனைத்து வயது மக்களிடையேப்
        புத்தகங்கள் பற்றியும் அதன் வாசிப்புப் பற்றியும் ஊக்குவிப்பினை நல்குவதற்காக வேண்டி
        நியமிக்கப்படுகின்றன.

      பொருளாதாரச் செய்திகள்

      Ways and Means Advances (வழிவகைக்கான முன்பணம்)

      • 2021-2022 ஆம் நிதி ஆண்டின் (அதாவது அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022) 2-வது
        அரையாண்டிற்கான வழிவகை முன்பணத்திற்கான வரம்பினை இந்திய ரிசர்வ் வங்கி
        நிர்ணயித்துள்ளது.
      • அதற்கான வரம்பு ரூ.50,000 கோடியாகும்.

      பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

      2021 IHA புளு பிளானட் பரிசு

      • சிறந்த நிலையான நீர்மின் நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான 2021 IHA புளு பிளானட் பரிசானது இந்தியாவின் 510 MW திறனுடைய தீஸ்தா – V நீர்மின்நிலையத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
      • இந்த நீர்மின்நிலையானது தேசிய நீர் மின்னாற்றல் கழக நிறுவனத்தினால் இயக்கப்படுகிறது.
      • தீஸ்தா – V நீர்மின் நிலையமானது சிக்கிம் மாநிலத்தில் பாயும் தீஸ்தா நதியில் அமைக்கப்படுகிறது.

      அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு – 2021

      • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் 80-வது நிறுவன தினத்தன்று இந்தப் பரிசானது அறிவிக்கப்பட்டது.
      • ஒவ்வொரு ஆண்டும் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், மருத்துவம், பொறியியல் மற்றும் புவி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் பூகோள அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பானப் பங்காற்றியதற்காக 45 வயதிற்கு உட்பட்ட விஞ்ஞானிகளுக்கு CSIR இந்த விருதினை வழங்கி வருகிறது.
      • இந்தப் பரிசானது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசினை உள்ளடக்கியதாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Tree.