Current Affairs in Tamil – May-1, 2021

Current Affairs in Tamil – May-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 1, 2021

மாநிலச் செய்திகள்

மிண்னணுப் பஞ்சாயத்து புரஷ்கர் விருது 2021

 • ஒவ்வொரு வருடமும் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யும் மாநிலங்களுக்கு மத்திய கிராமப் பஞ்சாயத்து அமைச்சகம் இந்த விருதுகளை வழங்குகிறது.
 • உத்தரப் பிரதேச அரசு 2021-ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து (இ-பஞ்சாயத்து) புரஷ்கர் விருதினை வென்றுள்ளது.
 • அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இரண்டாமிடத்திலும் ஒடிசா மற்றும் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளன.

தமிழ்நாடு

“பைரசோல்“ திட்டம்

 • சென்னையில் ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் உலர்த்தி மற்றும் வெப்பத்தாற்பகுப்பு சோதனை ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
 • இச்சோதனை ஆலையானது இந்தே-ஜெர்மானிய திட்டமான “பைரசோலின்“ ஓர் அங்கமாகும்.
 • இந்தியாவின் திறன்மிகு நகரங்களலும் மற்ற நகர்ப்புற மையங்களிலும் நகர்ப்புற கரிமக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கசடுகளை உயிரிக் கரிமப் பொருட்களாகவும் (Biochar) ஆற்றலாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இத்திட்டம் வழி வகுக்கும்.

தேசியச் செய்திகள்

லடாக் உத்வேகமளிக்கப்பட்ட மனம் திட்டம்

 • கார்கில் மற்றும் லடாக் மாவட்டத்தைச் சேர்ந்த லடாக்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதற்காக இந்திய இராணுவமானது “லடாக் உத்வேகமளிக்கப்பட்ட மனம்“ என்ற திட்டத்தினை தொடங்கியது.
 • இதற்காக HPCL மற்றும் கான்பூரைச் சேர்ந்த தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு எனப்படும் அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒற்கைப் படிக இறக்கைகள்

 • ஹெலிகாப்படர்களுக்கான ஒற்றைப் படிக இறக்கைகள் என்ற தொழில்நுட்பத்தினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
 • அந்நிறுவனம் அம்மாதிரியிலான 60 இறக்கைகளை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
 • இந்த ஒற்றைப் படிக உயர் அழுத்த சுழல் இறக்கைகள் நிக்கலை அடிப்படையாகக் கொண்ட மீவெப்ப உலோகக் கலவையினால் ஆனது.

பொருளாதாரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள்

 • பெருநிறுவன வங்கிகளுக்கான ஆட்சிமுறையை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் ஒரு சில வழி முறைகளை வகுத்தது.
 • மேலாண்மை இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) போன்ற பொறுப்புகளில் ஒரே நபர் 15 வருடத்திற்கு மேல் பதவி வகிக்கக் கூடாது. இருப்பினும், அவர்கள் 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நியமிக்கப்படலாம்
 • MD (or) CEO ஆகியோர் 12 ஆண்டுகளும் மேல் இந்தப் பதவிகளை வகிக்கக் கூடாது. இருப்பினும் அசாதாரணமான சூழ்நிலைகளில் அவர்கள் பதவிக் காலம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்

பிரபலமானவர்கள் மற்றும் விருதுகள்

ஆஸ்கார் விருது 2021

 • 93-வது அகாடெமி விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 அன்று லாஸ் ஏஞ்செல்சிலுள்ள டால்பி திரையரங்கம் மற்றும் யுனியன் ஸ்டேசன் ஆகிய இரு இடங்களிலிலுந்து ஒளிப்பரப்பப்ட்டது.
 • நொமேட்லாண்ட் படம் சிறந்தத் திடைப்படம், சிறந்த இயக்குநர் (சோலி சாவோ, நொமேட்லாண்ட்) மற்றும் சிறந்த நடி (மெக்டார்மண்ட்) ஆகியவற்றிற்காக ஆஸ்கார் விருதுகளை குவித்துள்ளது.
 • ”The Father” என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை அந்தோனி ஹாப்கின்ஸ் பெற்று உள்ளார்.
 • ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட வடிவமைப்பிற்காக டேவிட் பிஞ்செர்சின் ”மேங்க்” என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதினை வென்றது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the Cup.