Current Affairs in Tamil – March-4, 2021

Current Affairs in Tamil – March-4, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மார்ச் – 4, 2021

தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழம்

  • தமிழ்நாடு மாநில சட்டமன்றம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மசோதா 2021 என்ற மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
  • இதன்படி, திரவள்ளுவர் பல்கலைக்கழகமானது இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகமானது உருவாக்கப்பட உள்ளது.
  • இதற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தேசியச் செய்திகள்

ஒரு மாவட்டம் ஒரு குறிப்பி்ட்ட பொருள்

  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகமானது மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து, ஒரு மாவட்டம் ஒரு குறிப்பிட்ட பொருள் என்ற திட்டத்தற்கான பொருட்களை இறுதி செய்துள்ளது.
  • நாடு முழுவதும் 728 மாவட்டங்களுக்காக வேண்டி விவசாயம், தோட்டக் கலை, விலங்குகள், கோழிப் பண்ணை, பால், மீன் மற்றும் நீர்வளம், கடல்சார் துறை ஆகியவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் பிரதான் மந்திரி-எப்எம்இ (FME) என்ற திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்பட இருக்கின்றது.
  • 226 மாவட்டங்களுக்காக பழங்களும் 107 மாவட்டங்களுக்காக காய்கறிகளும் 105 மாவட்டங்களுக்காக நறுமணப் பொருட்களும் உள்ளன.
  • உணவுப்பிர்களான நெல் 40 மாவட்டங்களுக்கும் கோதுமை 5 மாவடங்களுக்கும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

கிருஷ்ணதேவராயரின் இறப்பு – முதலாவது கல்வெட்டு ஆதாரம்

  • இந்தியத் தொல்லியல் ஆய்வு மையமானது கிருஷ்ண தேவராய நாயக்கரின் இறப்பிற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளது.
  • துளுவ வம்சத்தைச் சேர்ந்த மூன்றாவது ஆட்சியாளரான இவர் 1509-1529 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் அரசராக விளங்கினார்.
  • கல்வெட்டின்படி, 1529-ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று கிருஷ்ண தேவராயர் இறந்தார்.
  • இந்தக் கல்வெட்டானது தும்கூர் மாவட்டத்தில் ஹோனன்னஹல்லியில் உள்ள கோபால கிருஷ்ண ஆலயத்திற்கு அருகில் கண்டெடுக்கப்படுள்ளது.

மும்பை – கடலுக்கடியில் சுரங்கம்

  • கடலோர சாலைத் திட்டமானது மும்பையின் மேற்குக் கடற்கரையைத் தெற்கில் உள்ள கடல் பகுதியிலிருந்து வடக்கில் உள்ள கண்டிவாலியுடன் (Kandivali) இணைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் 22.2 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணத் தடையற்ற ஒரு சாலையாகும்.
  • கடல், சுரங்கங்கள், பாலங்கள் ஆகியவற்றை புதுப்பித்து மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளின் மீது மண்சார் சாலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கிர்கோன் சௌபட்டி என்ற பகுதிக்கு அருகில் அரபிக் கடலின் அடியில் செல்ல இருக்கிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the heart.