Current Affairs in Tamil – July-23, 2021

Current Affairs in Tamil – July-23, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஜூலை – 23, 2021

தேசியச் செய்திகள்

மாத்ரூ கவசம்

  • கோவிட் 19 தடுப்பு மருந்துகளை அனைத்துக் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்குவதற்காக “மாத்ரூ கவசம்“ எனும் இயக்கத்தை கேரளா அரசு தொடங்கவிற்கிறது.

ஹரேலா பண்டிகை

  • அறுவடை மற்றும் பருவக்காலத்தை நினைவு கூறும் வகையில் உத்திரகாண்டில் குமாவோன் பகுதியில் ஹரேலா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆபரேசன் சாகர் ஆராக்சா II

  • கொழும்பில் இருந்து கிளம்பிய MV X Press Pearl என்ற கண்டெய்னர் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை எதிர்த்து இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியக் கடலோரக் காவற்படையினர் போராடினர்.
  • மேலும் தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில். இந்தியக் கடலோரக் காவல்படை உறுப்பினராக உள்ளது.

சர்வதேச செய்திகள்

ரஃபெல் “சீ பிரேக்கர்“

  • இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ர.ஃபேல் மேம்பட்ட பாதுப்பு அமைப்பு “சீ பிரேக்கர் “ என்ற ஒரு விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது கடல் மற்றும் நில இலக்குகளைத் தாக்கப் பயன்படும்

பொருளாதாரச் செய்திகள்

மின்சார வாகனக் கொள்கை

  • 2021 ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த வாகனத்திற்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • இக்கொள்ளையானது 2025 ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% புதிய மினசார வாகனப் பதிவுகள் மற்றும் மும்பை, நாக்பூர், புனே, அமராவதி, ஔரங்காபாத் மற்றும் நாசிக் உள்ளிட்ட 6 நகர்ப்புறங்களின் பொதுப் போக்குவரத்தினை 20% வரை மின்மயமாக்குதல் என்பதையும் உறுதி செய்ய உள்ளது.

மாநிலச் செய்திகள்

செயற்கைக்கோள் ஏவுதல் திட்டம்

  • பெங்களுரில் உள்ள மல்லேஸ்வரம் அரசு சிறுவர் உயர்நிலைப் பள்ளியில் 2022 ஆண்டில் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவெடுக்க உள்ளது.
  • இது நாட்டில் செயற்கைக்கோள் உருவாக உள்ள முதல் அரசுப் பள்ளியாக மாற உள்ளது.

சுற்றுச்சூழல் செய்திகள்

அவிசென்னியா மரினா

  • உப்பு சுரக்கும் சதுப்புநிலம் அவிசென்னியா மரினா ஆனது இந்தியாவில் உள்ள அனைத்துச் சதுப்புநிலத் தாவரங்களில் ஒன்றாகும்.
  • வேர்களுக்குள் உப்பு நுழைவதைத் தடுத்து விலக்குவதற்கான தன்மையைத் தவிர இதனால் இலைகளில் உள்ள உப்புச் சுரப்பிகள் வழியாக 40 என்ற அளவில் உப்பை வெளியேற்ற முடியும்.
  • புவேனஸ்வரில் உள்ள டிபிடி இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சயின்ச்ஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாட்டின் மேம்பட்ட லைஃப் சயின்சஸ் டெக்னாலஜி ஆகியவை இணைந்து இதைக் கண்டறிந்துள்ளன.

விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

ஒலிம்பிக் லாரல் முஹமது யூனுஸ்

  • வங்கதேசத்தைச் சேர்ந்த முஹமது யூனுஸ்(அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்) டோக்கியோ ஒலிம்பிக்கில் “ஒலிம்பிக் லாரல்“ கௌரவத்தைப் பெறும் இரண்டாவது நபர்.
  • யூனுஸ் “world’s banker to poor“ (ஏழைகளுக்கான உலகத்தின் வங்கி) என்று குறிப்பிடப்படுகிறார்.
  • மேலும் இவர் 1983 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் கிராமீன் வங்கியை நிறுவினார்.
  • இவர் 2006 ம் ஆண்டு நுண் நிதியத்திற்காக(microfinance) நோபல் பரிசு பெற்றார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the flag.