Current Affairs in Tamil – February-9, 2021

Current Affairs in Tamil – February-9, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 9, 2021

தேசியச் செய்திகள்

ஏரோ இந்தியா 2021

 • இந்தியாவின் முதன்மை விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியின் 13-வது பதிப்பான ஏரோ இந்தியா 2021 ஆனது பெங்களுரில் உள்ள விமானப் படை நிலையமான யெலஹங்காவில் துவங்கப்பட்டுள்ளது.
 • இந்தப் பதிப்பானது இரண்டு விதமாகவும் நடத்தப்படும் உலகின் முதல் வான்வெளி நிகழ்ச்சியாகும்.

தேசியப் பழங்குடியினர் விழா “ஆதி மஹோத்ஸவ்”

 • தேசியப் பழங்குடியினர் விழாவான “ஆடி மஹோத்ஸவ்” விழாவை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்.
 • இதை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனம் (TRIFED – Tribal Co-operative Marketing Development Federation ltd) ஏற்பாடு செய்துள்ளது.
 • இது பழங்குடியினக் கலாச்சாரம், கைவினைப் பொருட்கள்> உணவு வகைகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
 • இது 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர முயற்சியாகும்.

2021-ஆம் ஆண்டில் இரண்டாவதுமிகச் செழுமையான பொருளாதாரம்

 • 2021-ஆம் ஆண்டில் இந்தியா இரண்டாவது மிகச் செழுமையான பொருளாதாரமாக உருவெடுக்கும்.
 • இது சர்வதேசப் பொருளாதார தாங்குதிறன் தரவரிசை (International Economic Resilience) என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 • இதை PHD Chamber of Commerce and Industry எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
 • இந்தத் தரவரிசையின் முதல் 10 முன்னணிப் பொருளாதாரங்களில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.
 • இந்தப் பட்டியலில் தென் கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

யுத் அபியாஸ் கூட்டு இராணுவப் பயிற்சி

 • இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸின்’ 16-வது பதிப்பு ராஜஸ்தானில் நடத்தப்பட இருக்கின்றது.
 • பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் ராஜஸ்தானில் 5 நாள் கூட்டுப் பயிற்சியை நடத்திய அடுத்த சில நாடுகளில் இந்தப் பயிற்சியானது துவங்க உள்ளது.
 • இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு படைகளுக்கிடையேயான இயங்குந்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

இந்தியாவின் முதல் பனிக்குடில் உணவகம் (இக்லூகஃபே)

 • இது பனியால் கட்டப்பட்ட நாட்டின் முதல் உணவகமாகும்
 • இது ஆசியாவின் மிகப்பெரிய பனிக்குடில் உணவகமாகும்
 • இது காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் அமைந்துள்ளது.
 • இந்த விடுதி இமயமலையின் பீர்பாஞ்சல் மலைத் தொடரில் 2>650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் லித்தியம் இருப்பு

 • கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 1600 டன் லித்தியம் இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
 • மார்லகல்லா – அல்லபட்னா என்ற பிராந்தியத்தின் பெக்மாட்டைடு பகுதிகளில் அதன் மேற்பரப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட மேற்பரப்பு ஆகியவற்றின் கீழ்ப்பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 • இதை ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணுத் தாதுக்கள் இயக்குநரகம் (Atomic Minerals Directorate for Exploration and Research) மேற்கொண்டது.
 • AMD (Atomic Minerals Directorate) என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பிரிவாகும்.
 • இந்தியாவின் முதல் லித்தியம் ஆலை 2021-ஆம் ஆண்டில் குஜராத்தில் அமைக்கப்பட்டது.

பொருளாதாரச் செய்திகள்

அபாய நேர்வு அடிப்படையிலான உள் தணிக்கை

 • ரிசர்வ் வங்கியானது அபாய நேர்வுஅடிப்படையிலான ஓர் உள் தணிக்கை முறையை (risk-based internal audit system) அறிமுகப் படுத்தியுள்ளது.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 • இதன் விதிமுறைகளின்படி, 5,000 கோடி ரூபாய் மதிப்பு சொத்து கொண்டுள்ள, வைப்புத் தொகையைப் பெறும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இந்த முறையைச் செயல்படுத்த வேண்டும்.
 • இந்த முறை 2022-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேசச் செய்திகள்

ஆசியா-பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணையவுள்ள ஐக்கிய ராஜ்ஜியம்

 • ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கமானது விரிவா மற்றும் முற்போக்கான டிரான்ஸ் – பசிபிக் கூட்டுறவில் சேரவுள்ளது.
 • இது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக கூட்;டாண்மைகளுள் ஒன்றாகும்.
 • இது பசிபிக் பகுதியில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் 11 பொருளாதாரங்களால் ஆனது.
 • கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

பண்டிட் பீம்சென் ஜோஷியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் :

 • புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியப் பாடகர் பண்டிட் பீம்சென் ஜோஷியின் நூற்றாண்டு விழா 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று ஓராண்டு கால விழாவாக தொடங்கியது.
 • இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இந்தியப் பாடகர் ஆவார்.
 • இவர் காயல் (khayal) வகைப் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றவர் ஆவார்.
 • இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் கிராணா கரானா (Kirana gharana) என்ற வகையில் புகழ்பெற்றவர் ஆவார்.
 • இவரது இசை நிகழ்ச்சிகள் நியூயார்க்கில் சுவரொட்டிகளால் விளம்பரப்படுத்தப்பட்டன.
 • இந்தியாவைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞருக்கு முதல் முறையாக இவ்வாறு நடந்தது.
 • இவர் ஆண்டுதோறும் சவாய் காந்தர்வ இசை விழாவையும் நடத்தச் செய்தார்.
 • இவருக்கு 1998-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
 • இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை 2009-ஆம் ஆண்டில் இவர் பெற்றார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the truck.