Current Affairs in Tamil – February-6, 2021

Current Affairs in Tamil – February-6, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 6, 2021

சர்வதேசச் செய்திகள்

எடிசன் (Edision) கூட்டிணைவு :

  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF) அத்தியாவசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் அமைப்புக் கூட்டிணைவை (Essential Digital Infrastructure and Service and Services Network – EDISON) தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • WEF ஆனது EDISION தளத்திற்குச் செயலகமாகவும் ஒரு தளமாகவும் செயல்படும்.
  • இந்தக் கூட்டிணைவானது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உலக அளவில் மற்றும் சமமான முறையில் அணுகலை உறுதி செய்வதை நோக்கிப் பணியாற்ற இருக்கின்றது.

அண்டார்டிகாவில் அரிய வகைத் தாது கண்டுபிடிப்பு :

  • ஜாரோசைட் என்ற ஒரு அரிய வகைக் கடல்சார் தாதுவானது அண்டார்டிகா பனி மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது அண்டார்டிகா பனி மண்டலத்தில் ஆழ் துளையிடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதே போன்று செவ்வாயில் ஜாரோசைட்டின் இருப்பிற்கான ஒரு கோட்பாட்டிற்கு இது ஆதரவளிக்கின்றது.
  • இந்தத் தாதுக்கள் செவ்வாயில் அடர்த்தியான படிவுகளை உருவாக்கும் திறனைக் கொண்டது.
  • ஏனெனில் செவ்வாய் கோளானது அண்டார்டிகாவை விட அதிக அளவிலான தூசுக்களைக் கொண்டுள்ளது.

ஜாரோசைட்

  • ஜாரோசைட் என்பது செவ்வாயில் உள்ள ஒரு தாதுவாகும்.
  • இது புவியில் மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது
  • இது இரும்பு மற்றும் பொட்டாசியத்தின் ஒரு சல்பேட் ஆகும்
  • இந்தத் தாதுவானது நீர் மற்றும் அமிலச் சூழ்நிலைகளின் மூலம் உருவாகும் திறன் கொண்டது
  • இது “ஆப்பர்சூனிட்டி” என்ற ஒரு ஆய்வுக் கலன் மூலம் 2004-ஆம் ஆண்டில் செவ்வாயில் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதர ஜாராசைட் தாதுக்களானது வெள்ளி, சோடியம், ஈயம் மற்றும் அம்மோனியம் ஆகியவற்றை உள்ளடக்கியது
  • இந்தத் தாதுவானது முதன்முறையாக ஆகஸ்ட் பிரெய்த்தப்ட் என்பவரால் 1852-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிய குடியுரிமைக் கொள்கை :

  • (UAE) ஆனது தனது புதிய குடியுரிமைக் கொள்கையை அறிவித்துள்ளது.
  • அந்த அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட (குறிப்பிட்ட) வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
  • தனது பொருளாதாரத்தில் அதிக அளவில் வெளிநாட்டவர்களைப் பங்கு கொள்ள வைக்கும் முதலாவது வளைகுடா அரபு நடு (UAE)
  • இதற்கு முன்பு (UAE) ஆனது சில சிறப்பு நிகழ்வுகளில் சில வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
  • (UAE)-க்குச் சேவையை அளிப்பதற்காக அவர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டது.

தேசியச் செய்திகள்

குடியரசு தினத்திற்கான காட்சிப்பட அணிவகுப்பின் வெற்றியாளர்கள் :

  • உத்தரப் பிரதேசத்தின் இராமர் கோயில் காட்சிப் படமானது அனைத்துக் காட்சிப் படங்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • இது 2021-ஆம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது.
    • இதன் கருத்துரு, “அயோத்தியா : உத்தரப் பிரதேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்”.
  • திரிபுரா மாநிலக் காட்சிப் படமானது குடியரசு தினக் காட்சிப் பட அணிவகுப்பில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலக் காட்சிப் படமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிடையே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    • இதன் கருத்துரு, “தேவ பூமி – தெய்வங்களின் இருப்பிடம்”.
  • மத்தியப் பொதுப் பணித் துறையின் காட்சிப் படமானது ஆயுதப் படை வீரர்களின் உயிர்த் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு சிறப்புப்ப பரிசைப் பெற்று உள்ளது.
    • இதன் கருத்துரு, “அமர் ஜவான்”.

கலா உத்சவம் :

  • இந்தத் திட்டமானது ராஷ்டிரிய மாத்தியமிக் சிக்சா அபியான் (RMSA) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • தற்பொழுது RMSA ஆனது மற்ற இதர திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இது பள்ளிக் கல்விக்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டமான “சமக்ரா சிக்சா” என்பதின் கீழ் தற்பொழுது செயல்படுகின்றது.

இந்திய நீதி அறிக்கை – 2020 :

  • இது பின்வருவனவற்றுடன் இணைந்து டாடா அறக்கட்டளை அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சமூக நீதி மையம்
    • கமன் காஸ்
    • தக்ஸ் அமைப்பு
    • சட்டப்பூர்வக் கொள்கைக்கான விதி மையம் மற்றும்
    • காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு
  • இதில் ஆய்வு செய்யப்பட்ட 18 மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலமானது தொடர்ந்து 2-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்து தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இதில் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
  • சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்தையும் அருணாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

“பிரபுத்தா பாரத்தின்” 125-வது நினைவு தினம் :

  • 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று “பிரபுத்தா பாரத்தின்” 125-வது நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • “பிரபுத்தா பாரத்” என்பது ராமகிருஷ்ணரின் நினைவாக தொடங்கப்பட்ட மாதாந்திரப் பத்திரிக்கையாகும்.
  • இந்தப் பத்திரிக்கையானது 1896-ஆம் ஆண்டில் பி. அய்யாசாமி, பி.ஆர். ராஜம் அய்யர், ஜி.ஜி நரசிம்மாச்சாரியா மற்றும் பி.வி.சாமேஸ்வர அய்யர் ஆகியோரால் தொடங்கப்பட்டு உள்ளது.
  • இது சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பத்திரிக்கையானது 2 ஆண்டுகளுக்கு சென்னையிலிருந்துப் பிரசுரித்து வெளியிடப்பட்டது.
  • அதன் பிறகு, இந்தப் பத்திரிக்கையானது அல்மோராவில் இருந்து வெளியிடப்பட்டது.
  • 1899-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பத்திரிக்கையானது கொல்கத்தாவில் உள்ள அத்வைதா ஆசிரமத்;திலிருந்து வெளியிடப்படுகின்றது.

பொருளாதாரச் செய்திகள்

25 ஆண்டுக் காலத்தில் குறைந்த அளவிலான தங்கத் தேவை :

  • கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவையானது கடந்த 25 ஆண்டு காலத்தில் தற்பொழுது ஒரு மிகக் குறைந்த அளவாக 446.4 டன்களாக உள்ளது.
  • 2020-ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் மொத்த அணிகலன் தேவையானது 42% என்ற அளவில் குறைந்து 315.9 டன்களாக உள்ளது.
  • ஒரு ஆண்டிற்கான மொத்த முதலீட்டுத் தேவையானது 130.4 டன்களாக, 11% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத் தேவையானது மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the truck.