Current Affairs in Tamil – February-18, 2021

Current Affairs in Tamil – February-18, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 18, 2021

தேசியச் செய்திகள்

ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ்

  • மேற்கு வங்கத்தில் 11-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் துவக்கி வைக்கப்பட்து
  • இது ”ஏக் பாரத் ஸ்ரோஷ்தா பாரத்“ என்ற திட்டதின் கீழ் 2015-ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது
  • இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இ-சவானி தளம்

  • இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இ-சவானி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இதைப் பயன்படுத்தி, கன்டோன்மென்ட் பகுதிகளில் வசிப்பவர்கள் குடிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.

சர்வதேசச் செய்திகள்

  • ரஷ்யாவுடனான ”புதிய ஸ்டார்ட்” என்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
  • புதிய START ஒப்பந்தமானது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 5, அன்று காலாவதியாக இருந்தது.
  • ஆனால் இரு தரப்புகளும் இதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டித்துள்ளன.

பொருளாதார செய்திகள்

பெருநிறுவன இந்தியா இடர்க் குறியீடு

  • ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனமானது “பெருநிறுவன இந்தியா இடர்க் குறியீட்டை“ அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை எதிர்கொள்ளும் இடர்களின் அளவைப் புரிந்து கொள்ள உதவும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

“டிக்கின் சோனியா“ விலங்கின் புதைபடிவங்கள்

  • 550 மில்லியன் ஆண்டுகள் பழமையான “டிக்கின்சோனியா“ என்ற பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கின் மூன்று புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இது போபாலுக்கு அருகிலுள்ள பீம்பேட்கா பாறை வாழிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
  • இதில் ஒரு புதைபடிவம் 17 அங்குல நீளம் கொண்டது, மற்ற இரண்டு மிகவும் சிறியவை ஆகும்.

மாநிலச் செய்திகள்

ராஜஸ்தான் சிறை விதிகள் – 1951

  • ராஜஸ்தான் அரசானது 195-ஆம் ஆண்டின் ராஜஸ்தான் சிறை விதிகளைத் திருத்தியது.
  • இந்த நடவடிக்கையானது சாதி அடிப்படையில் வேலை ஒதுக்குவதை நீக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை“ சீர்திருத்தம்

  • ”ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை“ என்ற சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 13-வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.

பிரபலமானவர்கள் மற்றும் விருதுகள்

சரணாலய வாழ்நாள் சேவை விருது – 2020

  • இயற்கையியலாளரும் ஆர்வலருமான எஸ்.தியோடர் பாஸ்கரன் அவர்கள் 2020-ஆம் ஆண்டிற்கான சரணாலய வாழ்நாள் சேவை விருதை வென்றுள்ளார்.
  • முன்னதாக தமிழில் இயற்கையைப் பற்றி எழுதியதற்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the tree.