Current Affairs in Tamil – February-17, 2021

Current Affairs in Tamil – February-17, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 17, 2021

தமிழ்நாடு செய்திகள்

புதிய திட்டங்கள் மற்றும் நல உதவிகள்

  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 13 அன்று பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்./li>
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் 7-வது கட்ட அகழாய்வைத் தொடங்கி வைத்தார்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி நதியின் குறுக்கே 4 தடுப்பு அணைகளைக் கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டினார்.

தேசியச் செய்திகள்

டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்கள்

  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது தங்களிடம் காப்பீடு வைத்துள்ளவர்களுக்கு டிஜிலாக்கரில் டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குமாறு காப்பீடு வழங்கும் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
  • டிஜிலாக்கர் என்பது மத்திய அரசினால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்ள ஒரு முன்னெடுப்பாகும்.
  • இதனைப் பயன்படுத்தி, குடிமக்கள் அசல் சான்றிதழை்களை வழங்குபவரிடமிருந்து டிஜிட்டல் வடிவில் செல்லத்தக்க வகையிலான அதிகாரப்பூர்வ ஆவங்களை / சான்றிதழ்களைப் பெறமுடியும்.

சர்வதேசச் செய்திகள்

பாகிஸ்தான் போர்ப் பயிற்சி

  • பாகிஸ்தான் இராணுவமானது சிந்து மாகாணத்தில் உள்ள தார் பாலைவனத்தில் ஒரு மாத கால அளவுள்ள ஒரு பயிற்சியை நடத்திக் கெண்டிருக்கின்றது.
  • ஜனவரி 28-ஆம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்தப் பயிற்சியின் குறியீட்டுப் பெயர் “ஜிதார்-உல்-ஹடீட்“ என்பதாகும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

தாமிரபரணி நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பின் 11-வது பதிப்பு

  • இது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • கணக்கெடுப்பில் 74 இனங்களைச் சேர்ந்த 24,411 பறவைகள் காணப்பட்டன.

மாநிலச் செய்திகள்

காலநிலை தாங்குந்தன்மை மேம்பாட்டு வழிப்பாதை

  • பீகார் மாநிலமானது 2040-ஆம் ஆண்டில் காலநிலை தாங்குந்தன்மை மற்றும் குறைந்த கார்பன் மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இதுபோன்ற ஒப்பந்தத்தை UNEP அமைப்புடன் கையெழுத்திடும் முதலாவது இந்திய மாநிலம் பீகார் ஆகும்.

பிரபலமானவர்கள்

ICC-யின் புதிய தலைமை வழக்குரைஞர்

  • பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்குரைஞரான கரீம் கான் அவர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court – ICC) புதிய வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

  • இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (268) வீழ்த்திய 2-வது கிரிக்கெட் வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின். இவர் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • பிரியங்கா கோஸ்சுவாமி அவர்கள் 20 கி.மீ நடை பயணத்தில் ஒரு தேசியச் சாதனையை முறியடித்துள்ளார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.