நடப்பு நிகழ்வுகள் – 2021
பிப்ரவரி – 12, 2021
தேசியச் செய்திகள்
MCA21 பதிப்பு 3.0
- பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது தரவுப் பகுப்பாய்வு சார்ந்த MCA21 எனும் திட்டத்தின் பதிப்பு 30 என்பதை அக்டோபர் 2021-ஆம் ஆண்டிற்குள் தொடங்க உள்ளது.
- MCA21 பதிப்பு 3.0 என்பது இந்தியாவின் திட்ட மாதிரியில் அமைந்த ஒரு மின் ஆளுகைத் திட்டமாகும்.
சர்வதேசச் செய்திகள்
உலகின் முதல் ‘ஆற்றல் தீவு’
- உலகின் முதல் ஆற்றல் தீவை (Energy Island) வடக்குக் கடலில் கட்டும் ஒரு திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது.
- இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மூன்று மில்லியன் குடும்பங்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐரோப்பாவின் மின் கட்டங்களின் ஒருங்கிணைப்பை இந்த மையம் பலப்படுத்தும்.
பொருளாதாரச் செய்திகள்
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குழு
- நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
- ஒரு இடைக்கால வழிகாட்டுதலை வழங்க, இக்குழு அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
- 2020-ஆம் ஆண்டு வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் (திருத்தச் சட்டம்) என்ற சட்டத்தின் விதிகளின் படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
செவ்வாய் பனிக்கட்டடி படமிடல் திட்டம் – நாசா
- மூன்று சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ரோபோவைப் பயன்படுத்தி செவ்வாய் பனிக்கட்டி படமிடல் திட்டத்தை (Robotic Mars ice mapping mission) தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது.
- செவ்வாய்க் கிரகத்திற்கு வேண்டி மனிதனின் ஆரம்பக் கட்டப் பயணத்திற்கான சாத்தியமாமன அறிவியல் நோக்கங்களை அடையாளம் காண இந்தத் திட்டம் உதவும்.
கஸ்னவி ஏவுகணை
- பாகிஸ்தான் நாடானது தனது அணுசக்தி திறன் கொண்ட, நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் அமைந்த, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான கஸ்னவி என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் வகை ஏவுகணையாகும்.
- இது 290 கிலோமீட்டர் வரை தாக்கக் கூடிய திறனைக் கொண்டுள்ளது.
- இந்த ஏவுகணையின் வரம்பு 2,750 கிலோமீட்டர்கள் ஆகும்.
சிவப்புக் கோளின் முதல் புகைப்படம்
- சீனாவின் தியான்வென்-1 விண்வெளி ஆய்வுக் கலமானது செவ்வாய்க் கிரகத்தின் முதல் படத்தைப் பூமிக்கு அனுப்பியுள்ளது.
- இந்த விண்கலம் 2020-ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏவப்பட்டது
- இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து சுமார் 2.2 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் செய்திகள்
இந்தியாவின் இடி மின்னலுக்கான சோதனைத் தளம்
- இந்தியாவின் இடி மின்னலுக்கான முதல் ஆராய்ச்சி சோதனைத் தளமானது ஒடிசாவின் பாலசூரில் நிறுவப்படும்
- மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துன் இது நிறுவப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே பருவமழைக்கான ஒரு சோதனைத் தளமும் அமைக்கப்பட உள்ளது.
- பருவமழைக்கான ஒரு சோதனைத் தளம் அமைக்கப்படுவது இம்மாதிரியான ரீதியில் இதுவே முதல் வகையாகும்.
பனிப்பாறை உடைப்பால் தூண்டப்பட்ட வெள்ளம்
- உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோமலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
- சாமோலி மாவட்டத்தின் ரெய்னி என்ற கிராமத்தில் உள்ள ஓர் ஏரியும் இது உடைத்துள்ளது
- இந்த உடைப்பால் தௌலிகங்கா நதி மற்றும் ரிஷி கங்கா நதி ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது
- பனிச்சரிவானது ரிஷிகங்கா ஆற்றில் உள்ள ரிஷி கங்கா நீர்மின் நிலையைத்தை முழுவதுமாகச் சேதப்படுத்தியது.
மாசுபடுத்துவோர்களைக் கண்காணிக்க பொதுமக்கள் தளம்
- சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய பொது தகவல் தளத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது.
- இந்தத் தளம் விதிகளை மீறும் பொதுமக்கள் மீது வழக்குத் தொடர அதிகாரிகளுக்கு உதவும்.
- பொதுமக்கள் இற்த மேற்பார்வையைத் தவிர்க்க முயன்றாலும் இது அவர்கள் மீது வழக்குத் தொடரும்.