நடப்பு நிகழ்வுகள் – 2021
பிப்ரவரி – 11, 2021
தமிழகச் செய்திகள்
- இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – மதராசின் கலச்சாரத் திருவிழா‘சாரங்’
- மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது அந்நிறுவனத்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவான ‘சாரங்’ என்ற ஆண்டு இணையதள ரீதியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
- இது அதன் முதலாவது ஆன்லைன் பதிப்பாகும்.
- இந்த ஆண்டின் சாரங் விழாவிற்கான கருத்துரு ‘Vintage Vogue’ என்பதாகும்.
தேசியச் செய்திகள்
தேசியத் தோட்டக் கலைக் கண்காட்சி 2021
- இது 5 நாட்கள் நடைபெறும் ஒருநிகழ்ச்சியாகும்.
- இது இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research – IIHR) வளாகத்தில் நடத்தப்பட்டது.
- இந்தக் கண்காட்சியின் கருத்துரு, ‘புதிதாகத் தொழில் தொடங்குதல் மற்றும் எழுச்சிபெறும் இந்தியாவிற்கான தோட்டக்கலை’ என்பதாகும்.
- IIHR என்பது இந்தியவேளாண் ஆராய்ச்ச்க் கழகத்தின் ஒருதுணைநிறுவனமாகும்.
கோப்ராபடையின் முதலாவது பெண்கள் குழு
- 34 சி.ஆர.பி.எப் (CRPF) பெண் பாதுகாப்புப் படைவீரர்கள் கோப்ராஎனப்படும் சிறப்பு வன யுத்தப் பகுதி என்ற கமாண்டோ படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- கோப்ராஎன்பது இந்தியாவின் மத்தியரிசர்வ் காவல் படையின் ஒருசிறப்புநடவடிக்கைப் பிரிவாகும்.
- 2009-ம் ஆண்டில் நக்சலைட் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகஏற்படுத்தப்பட்டது.
சர்வதேசச் செய்திகள்
அரசு நிர்வாக ஆணையம் – மியான்மர்
- மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சியானது ஒருபுதிய அரசுநிர்வாக ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது
- இந்தநிர்வாக ஆணையமானது இராணுவத்தின் தலைமைத் தளபதியானமின் ஆங்க் ஹிலாய்ங் என்பவரால் தலைமை தாங்கப்படுகின்றது.
- இது மொத்தம் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
- இந்த 11 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர்.
பொருளாதாரச் செய்திகள்
‘ஒரேநாடு ஒரேதீர்ப்பாயம்’ அணுகுமுறை
- இந்தியரிசர்வ் வங்கியானது நுகர்வோர்களுக்கான குறைதீர்ப்பு அமைப்பை ஒரே தீர்ப்பாயத்தின் கீழ் ஒன்றிணைக்கவுள்ளது.
- இது தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 3 குறைதீர்ப்புத் திட்டங்களை மாற்ற உள்ளது.
- தற்பொழுது வங்கியியல், வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீதான நுகர்வோர்களுக்கான குறை தீர்ப்பிற்காக தனித்தனியான பிரத்தியேகதீர்ப்பாயத் திட்டங்கள் உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி
- சமீபத்தில் சதுரகிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகம் (Square Kilometer Array Observatory – SKAO) என்ற மன்றமானது சமீபத்தில் தனது சந்திப்பை நடத்தியது.
- SKAO என்பது அரசாங்கங்களுக் கிடையேயான ஒரு புதிய அமைப்பாகும்.
- தற்பொழுது SKAO ஆனது 10 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைக் கொண்டுள்ளது.
அமைக்கப்பட இருக்கும் ரேடியோ தொலைநோக்கி
- இதைகாஸ்மிக் துகள்களால் மூடப்பட்டுள்ள விண்வெளிப் பகுதிகளை கண்டறியவும் கண்ணுக்குப் புலப்படாத வாயுக்களைக் கண்டறியவும் பயன்படுத்தமுடியும்.
- சதுரகிலோமீட்டர் தொகுப்பு என்பது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய தொலை நோக்கியாகும்.
- இந்த தொலை நோக்கியானது ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது.
சுற்றுச்சூழல் செய்திகள்
இந்தியாவிற்கான 51-வது புலிகள் காப்பகம்
- மத்திய அரசானது தமிழ்நாட்டில் மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவற்றின் வனப் பகுதிகளில் பரவியிருக்கும் சரணாலயங்களுக்கு புலிகள் காப்பக அந்தஸ்து என்ற தகுதி நிலையினை வழங்கியுள்ளது.
- இது 63 பாலூட்டி இனங்கள் மற்றும் 323 பறவை இனங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.
- இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட்டிற்கான 5-வது புலிகள் காப்பகம் ஆகும்.
- மேகமலை வனவிலங்குச் சரணாலயமானது தேனிமற்றும் மதுரை மாவட்டங்களில் பரவிக் காணப்படுகின்றது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் நரைமயிர் அணில் வனவிலங்குச் சரணாலயமானது கேரளாவில் பெரியார் புலிகள் காப்பகத்தின் பகுதியோடுச் சேர்ந்து அமைந்துள்ளது.
- 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கடைசியான ஒரு புலிகள் காப்பகம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள காம்லாங் என்பதாகும்.