Current Affairs in Tamil – August-8, 2021

Current Affairs in Tamil – August-8, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 8, 2021

தேசிய செய்திகள்

பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலைத் திருத்துவதற்கான மசோதா

  • 2021 ம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குயினர்) ஆணை என்ற ஒரு மசோதாவினை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது 1950 ம் ஆண்டு அரசியலமைப்பு ஆணையினைத் திருத்தி அமைக்கிறது.
  • இம்மசோதா அருணச்சலப்பிரதேசத்தை சேர்ந்த அபோர வகை பழங்குடியினரை அறிவிக்கப்பட்ட பழங்குடியினரை பட்டியலில் சேர்க்கிறது.

TRIFED நிறுவனத்தின் 34வது நிறுவன தினம்

  • இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனமானது (TRIFED – Tribal Co operative Marketing Development Federation Limted) ஆகஸ்ட் 06 அன்று தனது 34வது நிறுவன தினத்தைத் கொண்டாடுகின்றது.
  • TRIFED நிறுவனமானது 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று நிறுவப்பட்டது. பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாடு எனும் உயரிய நோக்கோடு ஒரு தேசிய அளவிலானக் கூட்டுறவு அமைப்பாக இது நிறுவப்பட்டது.

விருதுகள்

SKOCH விருதுகள் – மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்காளம் அரசானது தனது வணிகத்தை எளிமையாக்கல் முன்னெடுப்பின் கீழான திட்டங்களுக்காக 4 SKOCH விருதுகளைப் பெற்றுள்ளது.
  • அம்மாநிலத் திட்டமான ”சில்பசக்தி“ எனும் இணையவழி ஒற்றைச் சாளரத் தளமானது பிளாட்டினம் விருதினைப் பெற்றுள்ளது.
  • அம்மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளுக்கான பதிவுச் சான்றிதழை இணையவழி மூலம் தாமாகப் புதுப்பிக்கும் முறையானது தங்க விருதினைப் பெற்றுள்ளது.
  • அம்மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகளில் வர்த்தக உரிமைகளை இணைய வழியில் வழங்குதல் மற்றும் இ-நதிக்கரன் ஆகியவை இரண்டு வெள்ளி விருதுகளை வென்று உள்ளன.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது

  • ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதானது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது எனப் பெயர் மாற்றப்படும்.
  • தயான் சந்த் அவர்களின் பிறந்த தினமானது தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இவர் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.