Current Affairs in Tamil – August-13, 2021

Current Affairs in Tamil – August-13, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 13, 2021

தேசியச் செய்திகள்

சுதந்திர தினம் – 75வது

  • இந்த ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினமானது செங்கோட்டை கொண்டாடப்பட உள்ளது.
  • சுதந்திர தினம் கருத்துரு “Nation First Always First” என்பதாகும்.

காகோரி இரயில் நடவடிக்கை

  • உத்தரப் பிரதேச அரசானது “காகோரி சதித் திட்டம்“ எனும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு விடுதலை இயக்க நிகழ்வினை “காகோரி இரயில் நடவடிக்கை“ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

தீர்ப்பாயச் சீர்த்திருத்தங்கள் மசோதா 2021

  • மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை ரத்து செய்வதற்காக இந்த மசோதாவானது இயற்றப்பட்டுள்ளது.
  • இந்தத் தீர்ப்பாயங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளும் உயர்நீதிமன்றம் (அ) வணிக நீதி மன்றத்திற்கு இடமாற்றப்படும்.

சர்வதேச செய்திகள்

அல் மொஹெத் அல் ஹிந்தி 2021

  • இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அல் மொஹெத் அல் ஹிந்தி 2021 எனப்படும் தங்களது முதல் கடற்படைப் பயிற்சியினை மேற்கொள்ள உள்ளன.

செயற்கை நுண்ணறிவு – DABUS

  • உலகிலேயே முதன்முறையாக ஒரு ”செயற்கை நுண்ணறிவு“ அமைப்பிற்கு தென் ஆப்பரிக்க நாடு காப்புரிமையினை வழங்கியுள்ளது.
  • DABUS(Device for the autonomous boot strapping of Unified Sentience) ஸ்டீபன் தாலேர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும்.

ஐடிபிபி படையில் முதன் முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்

  • இந்தோ – திபெத் போலீஸ் படையில் முதன் முறையாக இந்த படையில் உதவி கமாண்டட் பணியிடங்கள் பிரக்ரிதி, தீக்ஷா ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.