Current Affairs in Tamil – August-1, 2021

Current Affairs in Tamil – August-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 1, 2021

மாநிலச் செய்திகள்

கீழடியில் (சிவகங்கை) வெள்ளி நாணயம் காண்டுபிடிப்பு

 • 7ம் கட்ட அகழாய்வில் அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.மு 6ம் நூற்றாண்டிலிருந்த நாணயங்கள் பயன்படுத்தி இப்பகுதியின் மக்கள் வட இந்தியாவுடன் வணிகம் செய்துள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
 • இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சந்திரன், சூரியன், காளை, எருது மற்றும் வடிவியல் குறியீடுகள் கீழடியின் மக்கள் வர்த்தகச் சமுதாயத்தினர் என்பதைக் குறிக்கிறது. கி.மு. 6 ம் நூற்றாண்டின் மகாஜனபத காலத்திலிருந்து புழக்கத்தில் இருந்தன.

திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு

 • கர்நாடக மாநிலத்தின் அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைச் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ள முதல் மாநிலமாக இந்த மாநிலம் மாறியுள்ளது. அம்மாநில அரசானது அவர்களுக்கு 1% இடஒதுக்கீட்டினை வழங்குகிறது.

தேசியச் செய்திகள்

கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகள் மசோதா 2021

 • இந்த மசோதாவானது 1927 ஆம் ஆண்டு கலங்கரை விளக்கச் சட்டத்தினை ரத்து செய்து அதற்குப் பதிலாக இதனைச் சட்டடமாக உள்ளது.
 • இந்தியாவில் கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகளை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு கட்டமைப்பினை இந்த மசோதா வழங்க முனைகிறது.
 • இந்த மசோதாவின் படி மாவட்டங்களுக்கான தலைமை இயக்குநர், துணைத் தலைமை இயக்குநர்கள் அல்லது இயக்குநர்கள் ஆகியோரை மத்திய அரசு நியமிக்க உள்ளது.
 • இதன் விதிமுறைகளானது கடற்கரையோரப் பகுதிகள், கண்டத் திட்டு மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மண்டலங்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்தும்.

ராஜா மிர்ச்சா ஏற்றுமதி

 • நாகாலாந்திலிருந்து சுமார் 250 கி.கி அளவிலான ராஜா மிர்ச்சா லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
 • ராஜா மிர்ச்சா ஆனது நாகா கிங் சில்லி (மிளகாய்) எனவும் அழைக்கப்படுகிறது.
 • இது நாகலாந்திலிருந்து மேற்கொள்ளப்படும் முதல் ஏற்றுமதி ஆகும். 2008 ம் ஆண்டில் ராஜா மிர்ச்சாவிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

சர்வதேசச் செய்திகள்

K2 சிசரத்தில் ஏறிய இளம் வயது வீரர்

 • பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான செஹ்ரோஷ் காசிப் என்பவர் உலகில் 2 வது மிக பெரிய சிகரம் ஆகும்.
 • பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உலகின் 14 உயரிய சிகரங்கள் அமைந்துள்ளன, இவை 8000ers எனவும் அழைக்கப்படுகின்றன.

7 புதிய உலகப் பாரம்பரியத் தளங்கள் சேர்ப்பு

 • நான்கு தளங்கள்- வளமான உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான
  • அவை, அமாமி – ஒஷிமா தீவு, டோகுனோஷிமா தீவு, ஒகினாவா தீவின் வடப்பகுதி மற்றும் இரியோமேட் தீவு (ஜப்பான்)
  • கெட்டோல் எனும் கொரிய நாட்டின் ஒதப்பகுதி (கொரியா) காங்கிரச்சன் வனப்பகுதி (தாய்லாந்து) மற்றும்
  • கொல்கிக் மழைக்காடுகள் மற்றும் ஈரநிலங்கள் (ஜார்ஜியா)
 • மூன்று கலாச்சாரத் தளங்களாவன – டென்மார்க்கின் நீர்ப் பாதுகாப்பு வரம்பு,
  • துருக்கியிலுள்ள அர்ஸ்லான்டேப் மலை தொல்பொருள் ஆய்வுப் பகுதி மற்றும் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலுள்ள நல்வாழ்வு காலனிகள் (குடியிருப்புகள்)

சுற்றுச்சூழல் செய்திகள்

சர்வதேச தூய காற்று ஊக்கத் திட்டம் – இந்தூர்

 • மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் அல்லது இந்தியாவின் தூய்மையான நகரமானது சர்வதேச தூய காற்று ஊக்கத் திட்டத்திற்று வேண்டி தேர்வான ஒரே இந்திய நகரமாகும். இந்தத் திட்டமானது 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.
 • இது இந்தூர் மாநகராட்சி கழகம் மற்றும் மத்தியப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒத்துமைப்புடன் நகரின் காற்று மண்டலத்தை சுத்திகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the truck.