Current Affairs in Tamil – April-5, 2021

Current Affairs in Tamil – April-5, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 5, 2021

தேசியச் செய்திகள்

  • மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ”நிசாங்” ஜம்முவிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் ”ஆனந்தம் : மகிழ்ச்சிக்கான மையம்” என்ற ஒரு மையத்தினை திறந்து வைத்தார்.
  • 2021-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒன்றிணைகிறது.
  • ”ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” எனும் கருத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள முதன்மை நடவடிக்கைகள்
    • ஆலோசனை வழங்குதல்
    • முழுமையான ஆரோக்கியம்
    • மகிழ்ச்சியின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள்
    • ஆராய்ச்சி மற்றும் தலைமை
    • அசிரியர்கள் மேம்பாடு

சர்வதேசச் செய்திகள்

‘Shantir Ogroshena 2021’

  • ‘SHANTIR OGROSHENA 2021’ பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது 2021-ம் ஆண்டு ஏப்ரல் 04, முதல் ஏப்ரல் 12 வரை வங்காள தேசத்தில் நடைபெற உள்ளது.
  • கருத்து: “வலுவான அமைதி காப்பு நடவடிக்கைகள்”
  • வங்காள “தேசத் தந்தை“ எனப் போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹமான் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 50-வது சுதந்திர தினத்தை நினைவு கூறுவதற்காக நடத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல்

கியூலெக்ஸ் கொசு

  • பருவ நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு போன்றவற்றால் கியூலெக்ஸ் டெல்லி முழுவதும் மீண்டும் தென்பட தொடங்கியுள்ளன.
  • கியூலெக்ஸ் கொசுக்கள் தூய்மையற்ற தேங்கிய நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்களைப் பரப்பும்.

முக்கிய தினங்கள்

குழந்தைகள் புத்தக தினம்

  • இளையவர்களுக்கான புத்தகங்கள் குறித்த சர்வதேச வாரியத்தினால் அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வு. 1967-ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2021-ம் ஆண்டிற்கான கருத்து ”வார்த்தைகளின் இசை” (The Music of Woods).
  • வாசிப்பின் மீதான நேசிப்பை ஈர்ப்பதற்காகவும் குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த தகவலைப் பரப்புவதற்குமான இலாப நோக்கமில்லா அமைப்பாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.