Current Affairs in Tamil – April-1, 2021

Current Affairs in Tamil – April-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 1, 2021

மாநிலச் செய்திகள்

சிக்மோ திருவிழா நடைபெறாது

  • சிக்மோ திருவிழா என்பது கோவாவில் பழங்குடியினர் சமுதாயத்தால் கொண்டாடப்படும் வளமான மற்றும் பொன் நெல் அறுவடையினைக் கொண்டாடும் திருவிழாவாகும்.
  • வசந்த காலம் தொடங்குவதைக் குறிக்கும் இந்த திருவிழா குன்பீஸ், கௌடாஸ் மற்றும் வெளிப்ஸ் போன்ற விவசாய சமுதாயத்தினரால் கொண்டாடப்படுகிறது
  • சிக்மோ திருவிழா ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற இருந்தது. இந்த ஆண்டு திடீரென கோவிட்-19 தொற்றுப் பாதிப்புகள் உயர்ந்துள்ளதால் திருவிழாவின் அணிவகுப்புகள் நடைபெறாது என கோவா அரசு அறிவித்துள்ளது.

தேசியச் செய்திகள்

ஜல் ஜீவன் திட்டம் புதிய சாதனை

  • ஜல்ஜுவன் திட்டமானது 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, அன்று பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற இல்லங்களுக்கும் குடிநீர்க் குழய் வசதி வழங்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
  • ஜல்ஜீவன் திட்டம் 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் வசதி ஏற்படுத்தி தந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கடலடி கம்பிவடங்கள்

  • சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளை இணைப்பதற்காக இரண்டு புதிய கடலடி கம்பிவடங்களை அமைப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • Echo மற்றும் Bifrost எனப் பெயரிடப்பட்ட இந்தக் கம்பிவடங்கள் ஜாவா கடலைக் கடக்கும் ஒரு பலதரப்பட்ட பாதையினூடே செல்லும் முதல் இரண்டு கம்பிவடங்கள் ஆகும்.

சுற்றுச்சூழல்

மவுண்ட் மெராபி எரிமலை

  • 2,968 மீட்டர் உயரமுடைய மவுண்ட் மெராவி எரிமலை பண்டைய நகரமான யோக்யகர்தாவிற்கு அருகேயுள்ள அதிக நெருக்கமான மக்கள்தொகையைக் கொண்ட ஜாவா தீவில் அமைந்து உள்ளது.
  • அடிக்கடி கொந்தளிக்கக் கூடிய இந்த எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. காற்றில் அதிக உயரத்திற்கு சாம்பல்களைத் தெறித்தும் நெருப்புக் குழம்பு மற்றும் குப்பைகளை வெளியிட்டு வருகிறது.
  • இந்தோனேசியாவின் அடிக்கடி சீறும் பன்னிரெண்டு எரிமலைகளுள் ஒன்றாகும்.

விருதுகள்

சர்வதேச வனப் பாதுகாவலர் விருது

  • 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருது உலகெங்கும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணி புரியும் வனப் பாதுகாவலர்கள் மேற்கொள்ளும் அசாதாரணப் பணிகளை முன்னிலைப்படுத்தி அவற்றைப் பாராட்டும் நோக்கில் வழங்கப்படுகிறது.
  • இராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மகிந்தர் கிரி இந்த விருதினை வென்றுள்ளார்.
  • ஆசியாவிலேயே இந்த விருதைப் பெறும் ஒரே வனப் பாதுகாவலர் இவரே. வனப் பாதுகாப்பிற்காக இவர் ஆற்றிய தொண்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Key.