current affairs January -2

இந்திய நிகழ்வுகள்

அலகாபாத் நகரின் பெயர் (பிரயாக்ராஜ்) மாற்றம்: மத்திய அரசு ஒப்புதல்

  • உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரை “பிரயாக்ராஜ்” என பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. (Allahabad a Prayagraj)

வனிதா மதில்

  • கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை, மொத்தம் 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து, “வனிதா   மதில்” என்று பெயரிடப்பட்ட ‘பெண்கள் சுவர்’ பெண்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சி ஜனவரி 1 அன்று நடந்தது.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்தி நடிகர் காதர் கான் மறைவு

  • பிரபல இந்தி நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான் (வயது 81), உடல்நலக் குறைவால் கனடாவில் ஜனவரி 1 அன்று காலமானார்.

 

மாநாடுகள்

இந்திய சமூக அறிவியல் மாநாடு 2018

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், 42-வது இந்திய சமூக அறிவியல் மாநாடு  2018 (ISSC-Indian Social Science Congress) டிசம்பர் 27 அன்று  தொடங்கியது.

 

நியமனங்கள்

 

தலைமை தகவல் ஆணையர்  

  • நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) “சுதிர் பார்கவா” (Sudhir Bhargava) டெல்லியில் ஜனவரி 1 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • மேலும் 4 தகவல் ஆணையர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  1. யஷ்வர்தன் குமார் சின்ஹா
  2. வனஜா என்.சர்னா
  3. நீரஜ் குமார் குப்தா
  4. சுரேஷ் சந்திரா

ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

  • புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக “பிரவீன்குமார்” ஜனவரி 01, 2019 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
  • ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதி நகரில் 2019 ஜனவரி 1 முதல் தேதியில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது.
  • ஆந்திரா மாநில உயர் நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.

விளையாட்டு நிகழ்வுகள்

கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 2020

  • 2020-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியாவில், 2020 அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2019

  • உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் வரும் 2019 மே 30 முதல் ஜுலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019

  • ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் 2019 ஜூலையில் நடக்கின்றன. தலைசிறந்த 9அணிகள் இடம்பெறும் இப்போட்டி, 2 ஆண்டுகளாக 27 தொடர்களாக நடக்கிறது.

ரிஷாப் பன்ட்

  • ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் “20 கேட்ச்களைக் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை ரிஷாப் பன்ட்’ பெற்றுள்ளார்.
  • மெல்போர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான “பாக்ஸிங் டே டெஸ்ட்” போட்டி கடைசி நாளில், இந்த சாதனையை செய்தார்.

Leave a Comment