Current Affairs -January 1

இந்திய நிகழ்வுகள்

  1. INS VIRAT போர்க்கப்பல்: அருங்காட்சியகமாக – ஒப்புதல்

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமையை பெற்ற ஐஎன்எஸ்  விராட், 27, 800 டன் எடைக் கொண்டது.

  1. அந்தமான் தீவுகளுக்கு வெளிநாட்டினர் நேரடியாக செல்ல அனுமதி
  1. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம்
  • நாடாளுமன்ற மக்களவையில் “இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம்”
  • கொண்டுவரப்பட்டு டிசம்பர் 31 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுக்கு வந்ததால் அதன் அதிகாரங்கள் எய்ம்ஸ் இயக்குனர்கள் உள்பட சிறந்த நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டு நிகழ்வுகள்

  1. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை: ஜனவரி 1, 2019 முதல் அமல்

14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1, 2019  தடை விதிக்கப்படும் என உலக சுற்றுச்சூழல் தினமான 2018 ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அறிவித்தது.

கஜா புயல் நிவாரணம்: மத்திய அரசு ரூ.1,146 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 2018 நவம்பர்  15-ந் தேதி நள்ளிரவு வீசிய ‘கஜா’ புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை,  புதுக்கோட்டை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல், மழைக்கு 63 பேர் பலி ஆனார்கள்.

விளையாட்டு நிகழ்வுகள்

கிரிக்கெட்

2018 சிறந்த வீராங்கனை விருது: “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருதுகள்

  • 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனை – *ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
  • 2018 ஒரு நாள் கிரிக்கெட் சிறந்த வீராங்கனை *- ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
  • 2018 T20 கிரிக்கெட் சிறந்த வீராங்கனை *- அலிசா ஹீலே (ஆஸ்திரேலியா)
  • வளர்ந்து வரும் வீராங்கனை விருது* – சோபி எக்லெஸ்டன் (இங்கிலாந்து)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை (31.12.2018)

  1. டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
  2. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா முதலிடத்தில் உள்ளார்.
  3. பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
  4. டெஸ்ட் மட்டை வீச்சாளர் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

நியமனங்கள்

  • வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல் “ஷேக் ஹசினா” வெற்றி
  • அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசினா (வயது 71) பிரதமர் ஆனார்.
  • ஷேக் ஹசினா பிரதமர் ஆவது இது 4-வது முறையாகும்.

  இரயில்வே வாரிய தலைவராக “வி.கே. யாதவ்” நியமனம்

  • இரயில்வே வாரியத்துக்கு புதிய தலைவராக “வி.கே. யாதவ்” அவர்கள்

நியமிக்கபடுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் ”

  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எம். கிருஷ்ணன நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment