Current Affairs in Tamil – April-12, 2021

Current Affairs in Tamil – April-12, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 12, 2021

தேசியச் செய்திகள்

ஒடிசா இதிகாசம்

  • உத்கல் கேசரி டாக்டர்.ஹரேகிருஷ்ண மகாதேபினால் அகமத்நகர் கோட்டைச் சிறையில் சிறைப்பட்டிருந்த போது இந்த புத்தகத்தை எழுதினார்.
  • இப்புத்தகம் இதுவரையில் ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியானது.
  • சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஒடிசா இதிகாசத்தின்“ இந்தி மொழிப் பெயர்ப்பினை வெளியிட்டார். சங்கர்லால் புரோகித் இதனை இந்தியில் மொழிப்பெயர்த்துள்ளார்.

பொருளாதார செய்திகள்

நிதி உள்ளடக்க குறியீடு

  • இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் ஜுலை மாதத்தில் நிதி உள்ளடக்கக் குறியீட்டினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது மார்ச் மாதம் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டிற்கான குறியீடு.
  • நாட்டில் நிதி உள்ளடக்கத்தின் பரவலைக் கணக்கிடுவதற்காக பல பரிமாணங்களின் அடிப்படையில் ஒரு நிதி உள்ளடக்கக் குறியீட்டைத் தயாரித்து வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

RBI வங்கியின் அறிவிப்புகள்

  • இந்திய ரிசர்வ் வங்கி பண வழிங்கீட்டு அமைப்புகளை இயக்குபவர்களை RTGS மற்றும் NEFT போன்ற மையப்படுத்தப்பட்ட பணவழங்கீட்டு முறைகளின் நேரடி உறுப்பினராவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் பணவழங்கீட்டு முறைகளில் ஒரு முக்கியமான செயல்பாடாகும்.
  • கடந்த சில ஆண்டுகளாக பண வழங்கீட்டு முறையில் பணவழங்கீட்டு கருவிகள் வழங்குவோர், அட்டை வழங்கும் அமைப்புகள், ATM இயந்திரங்கள் இயக்கும் வங்கி சாரா அமைப்புகள் (WLA), TReDS தளம் போன்ற வங்கி சாரா நிறுவனங்களின் அளவும் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளதாக RBI குறிப்பிட்டுள்ளது.

சுற்றுச்சூழல்

கூம்பலகன் குருவி

  • பம்பாய் தேசிய இயற்கை வரலாற்றுச் சமூக அமைப்பின் அறிவியலாளர்கள் புதி பறவை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • அது மூன்று பட்டைகளுடைய கூம்பலகன் குருவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இவை ஆஸ்திரேலியா மற்றும் துருவப் பகுதிகள் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

விருதுகள்

தேவி சங்கர் அவஸ்தி விருது

  • புகழ்பெற்ற தேவிசங்கர் அவஸ்தி விருது இந்திய உரைநடையாளர், பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகரான அசுத்தோஷ் பரத்வாஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது “பித்ர-வத்“ எனும் படைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இது ஆங்கில மொழியில் ”The Death Trap” எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the heart.